உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / திருச்செந்துார் கடலில் புனித நீராடி முருகனை மனமுருக வேண்டிய பக்தர்கள் | Tiruchendur

திருச்செந்துார் கடலில் புனித நீராடி முருகனை மனமுருக வேண்டிய பக்தர்கள் | Tiruchendur

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு1.30 மணிக்கு விஸ்வ ரூப தரிசனமும் 2 மணிக்கு உதய மார்த்தாண்ட பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி பாதயாத்திரையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்துார் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பாத யாத்திரை பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி வழியாக வரும் பக்தர்களுக்கு மஞ்சள், பச்சை வண்ணங்களில் கையில் பட்டை அணிவித்து கோயிலில் தனி வரிசையில் சென்று முருகனை வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை