உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / லட்சார்ச்சனை கோலாகல ஆரம்பம்| Panguni Uththiram| Vadapalani murugan| Porur

லட்சார்ச்சனை கோலாகல ஆரம்பம்| Panguni Uththiram| Vadapalani murugan| Porur

லட்சார்ச்சனை கோலாகல ஆரம்பம்| Panguni Uththiram| Vadapalani murugan| Porur முருகனுக்கு உகந்த நாட்களில் ஒன்று பங்குனி உத்திரம். அன்று, முருகனுக்கும் வள்ளிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றதாக ஐதீகம். இந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. சிறப்பு வாய்ந்த சென்னை வடபழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர உற்சவம் கோலாகலமாக துவங்கியது. நேற்று காலை யாகசாலை பூஜையுடன் துவங்கி தற்போது லட்சார்ச்சனை நடக்கிறது. நாளை மாலை லட்சார்ச்சனை பூர்த்தி நடைபெறும். தொடர்ந்து ஏப்ரல் 1ம தேதி பங்குனி உத்திரத்தன்று மதியம் உச்சிகால பூஜையில் தீர்த்தவாரி நடக்க உள்ளது. ஏப்ரல் ஒன்றாம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் ஏப்ரல் நான்காம் தேதி வரை தினமும் இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர். திரளான பக்தர்கள் முருகா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்து மனமுருகினர்

மார் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை