/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ ஆதிமூலப் பெருமாள் கோயிலில் ₹3.37 கோடியில் திருப்பணிகள் | Vadapalani | Perumal Temple | Chennai
ஆதிமூலப் பெருமாள் கோயிலில் ₹3.37 கோடியில் திருப்பணிகள் | Vadapalani | Perumal Temple | Chennai
சென்னை, வடபழனியில் அமைந்துள்ளது ஆதிலட்சுமி தாயார் சமேத ஆதிமூலப் பெருமாள் கோயில். நுாற்றாண்டு பழமையான இக்கோவிலில் உற்சவராக கஜேந்திர வரதராஜப் பெருமாள் அருள்பாலிக்கிறார். வடபழனி முருகப் பெருமான் கோவிலின் உப கோயிலாக உள்ளது. கடைசியாக இக்கோயிலில் கடந்த 1960ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது, திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பணி மேற்கொள்ளவதற்காக இன்று பாலாலயம் செய்யப்பட்டது. அனைத்து சன்னதி மூலவர் திருமேனிகளை அத்திமரத்தில் படமாக வரைந்து ஆவாகனம் செய்து, ஹோமம் வளர்த்து, மூன்று கால பூஜைகளுடன் பாலாலயம் செய்யப்பட்டது.
ஜூலை 14, 2025