உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / வேண்டிய வரம் தரும் ஸ்ரீசர்வயோக மஹா மங்கள வாராஹி அம்மன்

வேண்டிய வரம் தரும் ஸ்ரீசர்வயோக மஹா மங்கள வாராஹி அம்மன்

வேண்டிய வரம் தரும் ஸ்ரீசர்வயோக மஹா மங்கள வாராஹி அம்மன் / Varagi Amman Decoration / Sri sarva yoga maha mangala varagi amman temple / kallampatti / madurai மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அடுத்துள்ள கல்லம்பட்டியில் ஸ்ரீசர்வயோக மஹா மங்கள வாராஹி அம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலின் இரண்டாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா கடந்த 25ம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. ஜூலை 5ம் தேதி விழா நிறைவடைகிறது. விழாவையொட்டி தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். 11 நாள் நடைபெறும் விழாவில் ஐந்தாம் நாள் விழாவான நேற்று சிம்ஹாருட வராஹி அம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்து வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. மூலவர் வாராஹி அம்மனுக்கு பால், பஞ்சாமிர்தம், தயிர், குங்குமம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மகா தீபாராதனைகள் காட்டப்பட்டது. தொடர்ந்து சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் வாராஹி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்ற பின் வீதி உலா புறப்பாடானது. பரத நாட்டிய மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. சிறப்பாக பங்கெடுத்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் ஸ்தாபகர், ஸ்தானிகர் செந்தில்குமார் தலைமையில் விழா குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

ஜூன் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை