வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்க காரணம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
இன்று வரலட்சுமி விரதம். எட்டு நன்மைகளைத் தரும் லட்சுமி தாயார், அஷ்டலட்சுமி எனப்படுகிறாள். அஷ்டம் என்றால் எட்டு. சிரமப்படும் பக்தர்களுக்கு அடைக்கலம் தரும் ஆதிலட்சுமி, குழந்தை பாக்கியம் தரும் சந்தான லட்சுமி, கல்வி தரும் வித்யாலட்சுமி, செல்வம் தரும் தனலட்சுமி, தானியம் தரும் தானிய லட்சுமி, பதவி தரும் கஜலட்சுமி, துணிவு அளிக்கும் வீரலட்சுமி, வெற்றி தரும் விஜலட்சுமி ஆகியோரை அஷ்டலட்சுமிகள் என்கிறோம். இவை எல்லாமே வாழ்க்கைக்கு தேவையானவை. இத்துடன் ஒன்பதாவது லட்சுமியாக இணைந்தவளே வரலட்சுமி. இவள் சுமங்கலி பாக்கியம் அருள்பவள். காரடையான் நோன்பு போன்ற விரத நாட்களிலும், கோயில்களிலும் தரும் கயிறுகளை பெண்கள் இடது கையில் தான் கட்டுவார்கள். வரலட்சுமி விரதம் மாங்கல்யத்துடன் சார்ந்த சுபமானது என்பதால், வலது கையில் கட்ட அனுமதியுண்டு. தீர்க்க சுமங்கலி பாக்கியம் வேண்டியும், தங்கள் கணவரின் முன்னேற்றம் வேண்டியும் வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பர். கன்னிப்பெண்கள், தங்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமைய விரதம் அனுஷ்டிப்பர். நகை வாங்க நல்லநாள் இது.