100 டன் விறகை எரித்து தீ மிதிக்கும் பக்தர்கள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
பெங்களூருவிலிருந்து மைசூரு செல்லும் சாலையில் 103 கி.மீ. துõரத்தில் உள்ளது ஆலகெரே என்ற கிராமம். மாண்டியா மாவட்டத்தில் இது உள்ளது. இந்த கிராமத்திலுள்ள வீரபத்திர சுவாமி கோவில் மிகவும் புகழ் பெற்றது, இந்தக் கோவிலில் மே மாதத்தில் நடக்கும் தீ மிதி திருவிழா பிரசித்தி பெற்றது. ஒன்றல்ல, இரண்டல்ல...நுõறு டன் விறகை இந்த விழாவுக்காக எரித்து அதில் பக்தர்கள் நடந்து செல்வார்கள். இதற்காக, பக்கத்து கிராமங்களில் இருந்து ஐந்து மாதங்களுக்கு முன்பிருந்தே ஆளுக்கொரு கட்டை வீதம் பக்தர்கள் கொண்டு வருவர். இதுவே, இந்தக் கோவிலுக்கு இவர்கள் செலுத்தும் முக்கிய காணிக்கையாக இருக்கிறது. இந்த திருவிழாவைக் காண சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாகக் கூடுவர். மே மாதத்தில், ஏற்கனவே வெயில் கடுமையாக இருக்கும். அந்த அனலையும் சகித்துக் கொண்டு, நுõறு டன் விறகை எரித்துக் கிடைக்கும் தணலில் நடப்பது என்பது மிகத் தீவிரமான பக்தி மிக்க வழிபாடாக கருதப்படுகிறது.