உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / அனுப்பிரவேச அவதாரம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

அனுப்பிரவேச அவதாரம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

அனு என்றால் துணை அல்லது இணை என்று பொருள். பிரவேசம் என்றால் நுழைதல். தெய்வத்தின் அவதாரத்துக்கு இணையாக பூமிக்கு வருவதையே அனுப்பிரவேச அவதாரம் என்பர். ஒருவரின் நற்குணம் இன்னொருவருக்கும் ஏற்படுமானால், அதை அனுப்பிரவேச அவதாரமாகக் கொள்ளலாம். பராசர முனிவரின் மகன் வியாசர். தன் மகனைப் பற்றி, விஷ்ணு புராணத்தில் மிகப்பிரமாதமாகச் சொல்கிறார் பராசரர். “என் மகன் சாமான்யமானவர் அல்ல. அவர் சாட்சாத் அந்த நாராயணனின் அவதாரம். அவ்வாறு, இல்லாவிட்டால், மகாபாரதம் என்ற அவ்வளவு பெரிய கிரந்தத்தை எழுதியிருக்க முடியுமா என்ன!” என்கிறார் அவர். இது நிஜமே! திருமாலின் குணங்கள் அனைத்தும் வியாசரிடம் நிறைந்திருந்தன. எனவே, அவரை அனுப்பிரவேச அவதாரம் என்று சொல்வது சாலவும் பொருந்தும்.

ஆக 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ