வானில் பறந்து குலை நடுங்க வைத்த சிலிண்டர்கள்
வானில் பறந்து குலை நடுங்க வைத்த சிலிண்டர்கள் | Ariyalur | Lorry carrying cylinders meets with an accident Cylinders exploded and scattered திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரை சேர்ந்த லாரி டிரைவர் கனகராஜ். இவர் கேஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்களை திருச்சி குடோனில் இருந்து அரியலூருக்கு ஏற்றி வந்தார். அரியலூர் மாவட்டம் வாரணாசி பிள்ளையார் கோயில் அருகே உள்ள வளைவில் லாரி திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதற ஆரம்பித்தன. பலத்த காயங்களுடன் டிரைவர் கனகராஜ் குதித்து உயிர் தப்பினார். அவரை அங்கிருந்தவர்கள் அரியலூர் அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். லாரியில் இருந்த மற்ற சிலிண்டர்களும் ஒவ்வொன்றாக வெடித்து தீ பற்றி எரிய தொடங்கியது. இதில் லாரி முற்றிலும் எரிந்து சேதமானது. சிலிண்டர்கள் வெடித்ததில் வானளாவிய அளவில் தீப்பிழம்பு எழுந்தது. சிலிண்டர்கள் வானில் பறந்து பல மீட்டர் தூரம் வீசப்பட்டன. லாரியி்ல் இருந்த சிலிண்டர்கள் அனைத்தும் எரிந்தன. அரியலூர் தீயணைப்பு நிலை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் தீயணைப்பு தீயை கட்டுப்படுத்தினர். போலீசார் தஞ்சாவூர் திருச்சியில் இருந்து அரியலூர் வரும் வாகனங்கள் கைகாட்டி வழியாக மாற்று பாதையில் அனுப்பினர். அரியலூர் எஸ்பி விஸ்வேஸ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் ரத்தினசாமி சம்பவ இடத்தில் விபத்து மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து விசாரணை நடத்தினார்.