சில்வர் பாத்திரங்கள் சேலைகளை அள்ளிச் சென்ற தேர்தல் துறையினர்
சில்வர் பாத்திரங்கள் சேலைகளை அள்ளிச் சென்ற தேர்தல் துறையினர் ElectionViolation |SilverVesselsSeized |Election 2026 வரும் ஏப்ரல் 23ல் தமிழக சட்ட சபை தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் தேதி அறிவித்த நிமிடத்தில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் மக்களுக்கு சில்வர் பாத்திரங்கள், புடவைகள் வழங்கப்பட்டு வருவதாக தேர்தல் துறைக்கு புகார்கள் சென்றன. ஜெயங்கொண்டம் அருகே கரடிகுளம் கிராமத்தில் ஜெயங்கொண்டம் திமுக வார்டு செயலாளர் மணிவண்ணன் மற்றும் அன்பழகன் ஆகியோர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மக்களுக்கு இலவச சில்வர் பாத்திரங்களை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது தேர்தல் துறையைச் சேர்ந்த பறக்கும் படையினர் அங்கு சென்று கையும் களவுமாக பிடித்து 4 மூட்டைகளில் இருந்த 279 சில்வர் பாத்திரங்களை பறிமுதல் செய்தனர். இதே போல ஜெயங்கொண்டத்தை அடுத்த செங்குந்தபுரம் கிராமத்தில் திமுக நகர அவைத் தலைவர் ஞானபிரகாசம், அவருடைய வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பாத்திரங்கள் மற்றும் சேலைகள் வைத்திருந்தார். பறக்கும் படையினர் அங்கு சென்றும் பொருள்களை பறிமுதல் செய்தனர். தேர்தல் அதிகாரிகள் இது குறித்து விசாரிக்கின்றனர்.