திருமணம் முடிந்தும் தீரா காதல்! திருநங்கையுடன் உயிரை மாய்த்த இளைஞர் | Chengalpattu
செங்கல்பட்டு அடுத்த பழவேலி இருளர் காலனியை சேர்ந்த சின்னபையன் மகன் ராமு வயது 24. இவரும் அதே பகுதியை சேர்ந்த சரளா என்ற திருநங்கையும் காதலித்து வந்தனர். இது பெற்றோருக்கு வேதனையை ஏற்படுத்தியது. ராமுவுக்கு திருமணம் நடந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று கருதினர். ஓராண்டுக்கு முன்பு லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஒரு மாதத்திலேயே மீண்டும் சரளாவுடன் ராமு பழகினார். பெற்றோர், மனைவி கண்டித்தும் பலன் இல்லை. யார் பேச்சையும் ராமு கேட்கவில்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை வந்தது. ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து விடலாம் என்று ராமுவும் திருநங்கை சரளாவும் முடிவு செய்தனர். பழவேலி பாலாற்றங்கரையில் உள்ள மரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்தனர். அவர்களின் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.