திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Anjaneyar Jeyanthi | Trichy
அன்புக்கும், தொண்டுக்கும் , வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கலியுக கடவுளான ஸ்ரீராமபக்தனான அனுமன் கலியுகக் கடவுளாக போற்றப்படுகிறார். அனுமன் மார்கழி மாதம் அமாவாசையன்று மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இன்று அனுமன் ஜெயந்தி விழா நாடெங்கிலும் உள்ள அனுமன் கோயில்களில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனுமன் ஜெயந்தியான இன்று விரதமிருந்து ராமநாமம் ஜெபித்து அனுமனை வழிபடுபவர்களுக்கு சஞ்சலங்கள் விலகி, சகல செல்வங்களும் பொங்கிபெருகும் என்பது நம்பிக்கை. சனிப்பெயர்ச்சி நடப்பவர்கள் அனுமனை வணங்கி வந்தால் சகல சங்கடங்களும் நீங்கும் என்பதும் ஐதீகம். அனுமன்ஜெயந்தியையொட்டி திருச்சியில் பிரசித்திபெற்ற கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயத்தில் முலவர் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்று தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். உற்சவர் ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை மற்றும் 10,008 ஜாங்கிரி மாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது . தொடர்ந்து வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க லட்சார்ச்சனை, ராம பாராயணம் நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அனுமனை தரிசித்துவருகின்றனர்.