திமுகவினர் மூவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு | Chennai | Attempt to murder |case registered
திமுகவினர் மூவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு | Chennai | Attempt to murder |case registered | 3 DMK Persons ஆந்திராவை சேர்ந்தவர் மண்ணு ரமணய்யா வயது 74. பில்டிங் கான்ட்ராக்டர். சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு 11வது மெயின் ரோட்டில் புதிதாக அப்பார்மென்ட் கட்டி வருகிறார். 188 வது வார்டு திமுக கவுன்சிலர் சமீனாவின் ஆட்கள் ரமணய்யாவை அணுகினர். அனுமதித்த கட்டுமான அளவை விட கூடுதல் சதுர அடியில் கட்டுமானம் கட்டுவதாக கூறினர். இதை கண்டு கொள்ளாமல் இருக்க தங்களுக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்து கவனிக்க வேண்டும் எனக் கூறினர். பணம் தர மறுத்த ரமணய்யாவை கடுமையாக தாக்கினர். கேட்ட தொகையை விரைந்து வந்து கொடுக்க வேண்டும். தாமதம் செய்தால் உனக்கு சங்கு தான் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த ரமணய்யாவை தனியார் ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். ஹார்ட் பேசன்ட்டான அவரை ICU வில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரமணய்யா போலீசில் புகார் கூறினார். விசாரணை நடத்திய போலீசார் 188 வது வார்டு இளைஞரணி பொருளாளர் விமல், முன்னாள் பகுதி விமல், மற்றும் செல்வா உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணை நடக்கிறது. மாமூல் கேட்டு ஆந்திர முதியவர் ரமணய்