உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / மகளைப் பார்த்து கண் கலங்கிய தாய்| autism woman wins weight lifting competition| Chennai

மகளைப் பார்த்து கண் கலங்கிய தாய்| autism woman wins weight lifting competition| Chennai

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் ஸ்வேதா வயது 22. பிறவியிலேயே ஆட்டிசம் குறைபாடு உள்ளவர். கடந்த நான்கு மாதங்களாக அம்பத்தூர் சி ஓ ஜி பிட்னஸ் ஜிம்மில் பயிற்சி பெற்று வருகிறார். அங்கிருந்த மெடல்களை பார்த்து ஆச்சரியத்துடன் தனது கோச்சிடம் இது என்ன என்று கேட்டுள்ளார் ஜிம்மில் பயிற்சி பெறுபவர்கள் பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் இது போன்ற மெடல் வழங்கப்படும் என கோச் கூறினார். அப்போது ஸ்வேதா தானும் போட்டியில் கலந்து கொண்டு மெடல் வாங்க வேண்டும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அதற்கான தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் இந்நிலையில் சென்னையில் மாவட்ட பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட ஸ்வேதா அசால்டாக 40 கிலோ பளு தூக்கி அசத்தினார். போட்டியில் ஸ்வேதா சிறப்பு பரிசு வென்றார். மெடல் வென்ற மகளை பார்த்த ஸ்வேதாவின் தாய் பூரிப்பில் கண்கலங்கினார். போட்டி ஏற்பாடுகளை சென்னை பளு தூக்கும் அசோசியேஷன் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் திருவெற்றியூர் இணைந்து செய்தனர்.

டிச 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ