ஆட்டோ டிரைவர் மீது பாய்ந்து கடித்துக் குதறிய தடை செய்யப்பட்ட ‛ராட்வீலர்' நாய்கள்
ஆட்டோ டிரைவர் மீது பாய்ந்து கடித்துக் குதறிய தடை செய்யப்பட்ட ‛ராட்வீலர் நாய்கள் / Banned dogs attack auto driver / chennai சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு ரகு என்பவர் மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுனேக்சாவுடன் வசித்தார். அதே பகுதியை சேர்ந்த புகழேந்தி என்பவர் ராட்வீலர் (Rottweiller) இனத்தைச் சேர்ந்த இரண்டு வளர்ப்பு நாய்களுடன் கடந்த ஆண்டு மே மாதம் பூங்காவில் வாக்கிங் சென்றார். அப்போது பூங்கா வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி சுனேக்சாவை ராட்வீலர் நாய்கள் கடித்து குதறின. நாய்களை கட்டுப்படுத்த புகழேந்தி போராடினார். முடியாமல் போனதால் நாய்களை அப்படியே விட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். சிறுமி சுனேக்சாவை நாய்கள் தலை முழுவதும் கடித்து குதறின. இதில் சிறுமி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். சிறுமியின் மரண ஓலம் கண்டு அப்பகுதி மக்கள் பூங்காவில் திரண்டனர். சிறுமியை கொடூரமாக கடித்துக் குதறிக் கொண்டிருந்த நாய்களை கடும் போராட்டத்திற்கு பின் விரட்டினர். தலை மற்றும் உடல் முழுவதும் படுகாயமடைந்த சிறுமியை ஸ்டான்லி அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். பின் மேல் சிகிச்சைக்காக அப்போலோ ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தலை மற்றும் உடல் முழுவதும் பல இடங்கயில் தையல்கள் போடப்பட்டன. இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து ஓராண்டு கடந்த நிலையில் சிறுமி தொடர் சிகிச்சையில் உள்ளார். breath: தமிழகத்தையே உலுக்கிய இத்துயர சம்பவத்தைத் தொடர்ந்து நாய் வளர்ப்பில் கட்டுப்பாடுகளை உடனடியாக அரசு அமல்படுத்தியது. இதற்காக அமைக்கப்பட்ட கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுனர்கள் அடங்கிய குழு தமிழகம் முழுவதும் பல்வேறு குழுக்களாக சென்று ஆய்வு செய்தது. இதில் தமிழகத்தில் வளர்க்கப்படும் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்கள் மிகவும் ஆக்ரோஷமானவை. மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் என பட்டியலிட்டது. எனவே பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்சல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், ராட்வீலர் உட்பட 23 வகையான நாய்களை வளர்க்க மற்றும் இனப்பெருக்கம் செய்ய அரசு தடை விதித்தது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்கப்படுகிறதா என மாநகராட்சியுடன் இணைந்து கால்நடைப் பராமரிப்புத்துறை கண்காணித்து வந்தது. ஆனால், கண்காணிப்பு பணி தொடரவில்லை. தடை செய்யப்பட்ட வெளிநாட்டு நாய் இனங்கள் வழக்கம் போல் சென்னையில் சில நாய் பிரியர்களால் வளர்க்கப்பட்டு வருவது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. breath: இதற்கு சாட்சியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் அதிர்ச்சி தரும் திடுக்கிடும் சம்பவம் இன்று அரங்கேறியது. சாலையில் நின்றிருந்த ஆட்டோ டிரைவரை தடை செய்யப்பட்ட ராட்வீலர் ரகத்தைச் சேர்ந்த 4 நாய்கள் கடித்துக் குதறிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. breath: சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முத்து. இவர் இன்று காலை சவாரிக்காக மூலக்கொத்தளம் பிபி கோவில் அருகில் காத்திருந்தார். அப்போது மகி என்பவரின் மகன்கள் இருவர் நான்கிற்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட ராட்வீலர் நாய்களை ரோட்டில் வாக்கிங் அழைத்து சென்றனர். அப்பகுதியில் பள்ளி சிறுவர், சிறுமியர் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து நாய்கள் குறைக்க ஆரம்பித்தன. அப்போது அருகில் சவாரிக்காக காந்திருந்த ஆட்டோ டிரைவர் முத்துவை நான்கிற்கும் மேற்பட்ட நாய்கள் சேர்ந்து சரமாரியாக கடித்து குதறியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் மற்றும் கடைக்காரர்கள் நாய்களிடமிருந்து முத்துவை காப்பாற்ற பெரும்பாடு பட்டனர். எனினும், முத்துவை நடுரோட்டிற்கு இழுத்து சென்ற நாய்கள் கொடூரமாகவும், வெறித்தனமாக கடித்து குதிறியது. காப்பாற்ற வந்தவர்களை கடிக்கப் பாய்ந்தது. ஒரு வழியாக நாய் வளர்க்கும் மகியின் மகன்கள் நாய்களை போராடி அழைத்து சென்றனர். நாய்கள் கடித்து குதறியதில் உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் மயங்கிய முத்துவை மீட்டு அரசு ஸ்டான்லி ஹாஸ்பிடல் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கைகளில் 20க்கும் மேற்பட்ட தையல் போட்டும், ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி போட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. breath: அப்பகுதி மக்கள் கூறுகையில், தடை செய்யப்பட்ட வெளிநாட்டு நாய்களை வாக்கிங் அழைத்து செல்பவர்களால் சாலையில் செல்வோர் பலமுறை கடி வாங்கியுள்ளனர். மகி என்பவரின் ஐந்துக்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட ராட்வீலர் நாய்கள் வளர்த்து வருகிறார். நாய்களை வாக்கிங் அழைத்து வரும்போது வாயில் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவது கிடையாது. மகி வளர்க்கும் ராட்வீலர் நாய்களால் வண்ணாரப்பேட்டை பகுதி மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். நாய்கள் கடித்து மரணம் ஏற்படும் முன் தடை செய்யப்பட்ட நாய்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.