சாம்பியன் பட்டம் வென்ற கோவளம் அணி
சாம்பியன் பட்டம் வென்ற கோவளம் அணி / Chengalpattu / Beach Cricket Tournament / ₹2 lakh Prize for Kovalam Team / ECR Kovalam cricket final செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சித் தலைவர் சோபனா தங்கம் சுந்தர் ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி பீச் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. கடந்த 27 நாட்களாக நடைபெற்ற போட்டியில் 274 அணிகள் பங்கேற்றன. இதில் 272 போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. எஸ் டி எஸ் பவுண்டேஷன் நிறுவன தலைவர் சுந்தர் கட்டமைப்பில் இரண்டாம் ஆண்டாக நடைபெற்ற பீச் கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டியை காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போரூர் ஒன்றியக் குழு தலைவர் இதயவர்மன் துவக்கி வைத்தனர். டாஸ் வென்ற கோவளம் அணிக்கு 15 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த கானத்தூர் ரெட்டி குப்பம் அணி 5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 60 ரன் எடுத்து ஆட்டம் இழந்தது. இரண்டாவதாக களமிறங்கிய கோவளம் அணி 4 ஓவர்களில் 3 விகேட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 2 லட்சத்து 101 ரூபாய் ரொக்கப்பரிசை தட்டிச் சென்றது. கானத்தூர் அணி 1 லட்சத்து 101 ரூபாய் இரண்டாம் பரிசு வென்றது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி போன்று நடத்தப்பட்ட போட்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.