/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ பாரத ஐயப்ப சேவா சங்கம் ஏற்பாடு | Tiruvetiyur | Bharat Ayyappa Seva Sangam
பாரத ஐயப்ப சேவா சங்கம் ஏற்பாடு | Tiruvetiyur | Bharat Ayyappa Seva Sangam
திருவெற்றியூர் காலடி பேட்டை சன்னதி தெருவில் உள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜப் பெருமாள் கோயிலில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 20 ம் ஆண்டு ஐயப்பன் ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்ட இன்று காலை கணபதி ஹோமத்துடன் ஐயப்ப சுவாமியின் விக்ரஹம் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டது. ஐயப்பனுக்கு சிறப்பு அர்ச்சனையுடன் தீபாரதனைகள் காட்டப்பட்டது. தொடர்ந்து டோல்கேட் தண்டு மாரியம்மன் கோயிலில் ஐயப்பன் யானை வாகனத்தில் எழுந்தருளினார். 500 க்கும் மேற்பட்ட பெண்கள் கைகளில் விளக்கு ஏந்தி ஐயப்பா சரண கோஷம் எழுப்பி ஊர்வலமாக சென்றனர். பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
டிச 22, 2024