தினமலர் - வேலம்மாள் நியூ ஜென் கிட்ஸ் வழங்கிய வித்யாரம்பம் | Vidyarambham | Vidyarambham 2026 | Dinam
தினமலர் - வேலம்மாள் நியூ ஜென் கிட்ஸ் வழங்கிய வித்யாரம்பம் | Vidyarambham | Vidyarambham 2026 | Dinamalar | Velammal New Gen Kids | Thambaram | Chennai தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் வேலம்மாள் நியூ ஜென் கிட்ஸ் இணைந்து இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைத்து கல்வி கோயிலுக்குள் அழைத்து சென்றது. விஜய தசமி வித்யாரம்பம் நாளான இன்று ‛அ னா, ‛ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி, கிழக்கு தாம்பரம், ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை, 7:30 முதல் மதியம் 1: 30 மணி வரை நடந்தது. முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காலை முதலே குழந்தைகளுடன் பெற்றோர் ஆர்வத்துடன் குவிந்த வண்ணம் இருந்தனர். நிகழ்ச்சியில் எழுத்தாளர் சுவாமிநாதன், ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு, ஆன்மிகப் பேச்சாளர் நாகை முகுந்தன், டாக்டர் இந்திராணி சுரேஷ், சங்கர வித்யாலயா பள்ளி முதல்வர் பத்மாவதி ஆகியோர் கலந்துகொண்டனர். இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து, ‛அ னா, ‛ஆ வன்னா அரிச்சுவடி எழுதி ஆரம்பித்து வைத்தனர். அரிச்சுவடி எழுதிய உடன், அவர்களின் புகைப்படத்துடன் கூடிய, தினமலர் நாளிதழின் சான்றிதழ் மற்றும் குழந்தைகளுக்கு டீ சர்ட்டுடன் (T Shirt) தலா 1,000 ரூபாய் மதிப்புடைய லேர்னிங் கிட் (learning kid) பரிசாக வழங்கப்பட்டது. சேனல் பார்ட்டனராக தமிழ் ஜனம் செயல்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மழலைச் செல்வங்களுக்கும் மைலோ குளிர்பானம், பிஸ்கெட், பழம் ஆகியவை வழங்கப்பட்டது.