உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / ₹1 கோடி போதை பொருளுடன் சென்னையில் நைஜீரிய கும்பல்! அதிர வைக்கும் பின்னணி! | chennai crime news

₹1 கோடி போதை பொருளுடன் சென்னையில் நைஜீரிய கும்பல்! அதிர வைக்கும் பின்னணி! | chennai crime news

சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் வெளிநாட்டை சேர்ந்த நபர் அங்கும் இங்கும் சந்தேகப்படும் படி நடமாடிக்கொண்டு இருந்தார். கோயம்பேடு போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் கோகைன் என்னும் விலை உயர்ந்த போதை பொருள் 2 கிராம் இருந்தது. போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் பாணியில் விசாரித்த போது, அவர் நைஜீரியாவை சேர்ந்த அஜாகு ஸ்னேடு ஒனோசி வயது 47 என்பது தெரியவந்தது. அவரது கூட்டாளி அமே சியோன் இனலெக்கியூக்கும், ஒனோசியின் மனைவி மில்சியா என்ற லியோனிக்கும் இதில் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். ஒனோசி தனது மனைவியுடன் முடிச்சூரில் காட்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். அமே பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வந்தார். ஒனோசி சிக்கியதும் அவரது வீட்டில் ரெய்டு நடந்தது. அங்கு ஒரு கிலோ கோகைன் இருந்தது. அதை கைப்பற்றிய கையோடு மூவரையும் கைது செய்தோம் என்று போலீசார் கூறினர். இது குறித்து போலீசார் மேலும் கூறியதாவது: கோகைன் ஒரு சர்வதேச போதைப்பொருள். குட்கா, கஞ்சா போல் அல்ல. இதன் விலை பல மடங்கு அதிகம். ஒரு கிலோ கோகைன் ஒரு கோடி ரூபாய் வரை விலை போகும். சென்னையில் ஒரு கிலோ கோகைன் சிக்கி இருப்பது சாதாரண விஷயம் அல்ல. இதை பல ஆயிரம் பேர் பயன்படுத்த முடியும். சரியான நேரத்தில் கும்பலை சுற்றி வளைத்து விட்டோம். கோகைனை உயர் தட்டு மக்கள் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். காரணம், சில்லறை விலையில் ஒரு கிராம் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகிறது. வெளிநாட்டில் இருந்து தான் இதை கடத்தி வந்து இருக்கின்றனர். ஆனால் இப்போது சிக்கிய மூவர் மட்டுமே இதன் பின்னணியில் இல்லை. பெரிய நெட்வொர்க்கே உள்ளது. சென்னையில் உள்ள தொழிலதிபர்கள் தான் இந்த கோகைன் கும்பலின் இலக்காக இருந்துள்ளது. வீக் எண்ட் பார்ட்டிகளிலும் இதை சப்ளை செய்துள்ளனர். சென்னைக்குள் ஒரு கிலோ கோகைன் தான் ஊடுருவியதா? இல்லை இன்னும் அதிகம் கைமாறிக் கொண்டு இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதை தெரிந்து கொள்ள இப்போது சிக்கிய மூவரையும் காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்க உள்ளோம். அதில் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதை வைத்து பின்னணியில் உள்ள மொத்த நெட்வொர்க்கையும் தூக்கப் போகிறோம் என்று துணை கமிஷனர் ரோகித் நாதன் கூறினார். கைதான மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒனோசி மீது ஏற்கனவே சேலையூரில் ஒரு கொலை வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு தான் 4 கோடி ரூபாய் அளவில் சர்வதேச போதை பொருளான மெத்தம்பைட்டமைன் சிக்கியது. அதற்குள் இன்னொரு வகை சர்வதேச போதை பொருள் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜன 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை