ஏப்ரல் 26ல் சென்னை அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது
ஏப்ரல் 26ல் சென்னை அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது | Chennai | Chennai Super Kings team arrives in Chennai இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. ரசிகர்கள் உற்சாகத்துடன் மைதானங்களை நிரப்பி வருகின்றனர். இந்நிலையில், மும்பை வான்கடை மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி,அதிக ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த ஆட்டத்திற்காக சென்னை அணியினர் மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சொகுசு பேருந்தில் நகரின் நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வரும் ஏப்ரல் 26ம் தேதி சென்னை அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த ஆட்டமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.