தாய்லாந்துக்கு தப்பி ஓடிய முக்கிய குற்றவாளி | Digital arrest Cyber fraud | Tirupati
திருப்பதியை சேர்ந்த 65 வயது பெண் ஒருவருக்கு தெரியாத நம்பரில் இருந்து வாட்ஸ்அப் வீடியோ கால் வந்தது அதில் பேசிய மர்ம நபர் தன்னை டெல்லி சிபிஐ அதிகாரி என கூறியுள்ளார் பெண்ணிடம் உங்கள் பெயரில் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு 200 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோத செயல் அதனால் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம் என கூறியுள்ளார் பதற்றம் அடைந்த பெண்ணிடம் இருந்து வங்கி கணக்கு விவரங்களை மர்ம நபர்கள் சேகரித்தனர் வங்கி கணக்கில் பணம் இருப்பதை உறுதி செய்த பின் பெண்ணிடம், நாங்கள் கூறும் வங்கியில் பணத்தை செலுத்தினால் அதை உங்களுக்கு திரும்ப தர மறு பரிசீலனை செய்வோம் என ஆசை வார்த்தை கூறினர் அதை நம்பிய பெண் ஒரு மாதத்தில் மர்ம நபர்கள் கொடுத்த 20 வெவ்வேறு அக்கவுண்டிற்கு இரண்டரை கோடி அனுப்பியுள்ளார் பணத்தைப் அனுப்பிய பின் மர்ம நபரின் ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த பெண் ஜனவரி 13-ஆம் தேதி திருப்பதி மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் மர்ம நபர்கள் கொடுத்த வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் வாட்ஸ்அப் கால் வந்த ஃபோன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர் மர்ம நபர்களின் 13 வங்கி கணக்குகள் ராஜமுந்திரி மற்றும் ஏழு வங்கி கணக்குகள் விசாகப்பட்டினத்தில் இருந்தது தொடர் விசாரணையில் விசாகப்பட்டினம் பெந்துர்த்தியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர் அவரிடமிருந்து இருபத்திநான்கரை லட்சம் ரூபாய், ஒரு கார், ரெண்டு செல்போன், ரெண்டு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது விசாரணையில் தாய்லாந்துக்கு தப்பிச்சென்ற அருண்குமாரின் சகோதரர் முக்கிய குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டது. வங்கி கணக்குகள் கொடுத்து உதவிய 20 பேர் உட்பட மோசடியில் ஈடுபட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவர் என திருப்பதி எஸ் பி மணிகண்டா தெரிவித்தார்