உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / பொற்கிழி வழங்கி பாராட்டு | dinamalar pattam chess tournament | VIT Chennai

பொற்கிழி வழங்கி பாராட்டு | dinamalar pattam chess tournament | VIT Chennai

தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் சென்னை வி.ஐ.டி., பல்கலை சார்பில் மாநில அளவிலான பட்டம் செஸ் டோர்னமென்ட் - 2024 நேற்று நடந்தது. சென்னை வி.ஐ.டி. பல்கலை வளாகத்தில் நடந்த போட்டிக்கு பெண்கள் 194 பேர், ஆண்கள் 474 பேர் என மொத்தம் 668 பேர் வந்தனர். விஐடி பல்கலை இணை துணைவேந்தர் டி.தியாகராஜன், தினமலர் நாளிதழின் துணை பொதுமேலாளர் சேகர், பட்டம் மாணவர் பதிப்பு இதழின் பொறுப்பாசிரியர் ஆர்.வெங்கடேஷ் மற்றும் போட்டியாளர்களாக வந்த மாணவ-மாணவியரில் சிலர் இணைந்து குத்து விளக்கேற்றி போட்டியை துவக்கி வைத்தனர். 9, 11, 13, 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டி நடந்தது. ஆண்களுக்கு 5 சுற்று போட்டியும், பெண்களுக்கு 4 சுற்று போட்டியும் நடந்தது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் 4 முதல் 13வது இடம் வரை பிடித்தவர்களுக்கும் பெண்கள் பிரிவில் 8ம் இடம் வரை பிடித்த மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 9 வயது பிரிவில் ஹர்ஷவர்தன் மேகநாதன் மற்றும் பெனிடா மேபெல்; 11 வயது பிரிவில் ஷாவுன் மேத்யூ மற்றும் ஆயுஷி தினேஷ்; 13 வயது பிரிவில் தர்ஷன் மற்றும் தன்யா; 15 வயது பிரிவில் லுாகேஷ் மற்றும் சாகனபிரியா; 17 வயது பிரிவில் பாலா சஞ்சய் மற்றும் சாதனா ஆகியோர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். மொத்தமாக 30 பேருக்கு 50,000 ரூபாய்க்கான ரொக்கப் பரிசுகளும், 105 மாணவர்கள், 30 பள்ளிகளுக்கு வெற்றிக்கோப்பைகளும் வழங்கப்பட்டன. வெற்றியாளர்களின் கைகளில் மின்னிய வெற்றிக் கோப்பைகளை, பூர்விகா அப்ளையன்சஸ் நிறுவனம் வழங்கி கவுரவித்தது. ஒன்பது வயது பிரிவில் ஹர்ஷவர்தன் மேகநாதன் மற்றும் பெனிடா மேபெல்; 11 வயது பிரிவில் ஷாவுன் மேத்யூ மற்றும் ஆயுஷி தினேஷ்; 13 வயது பிரிவில் தர்ஷன் மற்றும் தன்யா; 15 வயது பிரிவில் லுாகேஷ் மற்றும் சாகனபிரியா; 17 வயது பிரிவில் பாலா சஞ்சய் மற்றும் சாதனா ஆகியோர் முதலிடம் பிடித்து, சாதனை படைத்தனர்.

ஆக 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை