திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது / Chennai / DMK public meeting on electricity theft சென்னை தரமணியில் வேளச்சேரி மேற்கு பகுதி 178 வது வட்ட திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. அமைச்சர்கள் பெரியசாமி, சுப்பிரமணியன், எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் பிரபாகர ராஜா, ஹஸன் மௌலானா, துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு பாடநுால் கழகத் தலைவர் லியோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்காக 2 ஜெனரேட்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கூடுதல் தேவைக்கு டிரான்ஸ்பார்மரில் இருந்து கொக்கி போட்டு மின்சாரத்தை திருடி பயன்படுத்தினர். பிரிக்க முடியாதது மின் திருட்டும்; திமுகவும் என மாற்றுக் கட்சியினர் கிண்டலடித்தனர்.
மார் 16, 2025