உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / சென்னையில் நள்ளிரவு இளம் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்

சென்னையில் நள்ளிரவு இளம் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்

சென்னையில் நள்ளிரவு இளம் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் / Chennai / Drunk woman sexually assaulted by youth கேரளாவை சேர்ந்த 24 வயது பெண் சென்னை பெருங்குடி அப்பார்ட்மென்ட்டில் வசிக்கிறார். சாஃப்ட்வேர் இன்ஜினீயரான இவர் சென்னை ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நேற்றிரவு 1:30 மணியளவில் பணி முடிந்து வழக்கம் போல் வீடு திரும்பினார். பின் தொடர்ந்தது வந்த இளைஞர் வீட்டின் வாசலுக்கு அருகில் பெண்ணின் வாயை கையால் மூடிக்கொண்டு அருகில் இழுத்து சென்று கட்டிப்பிடித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். இளம்பெண் அந்த நபரின் கையை கடித்து விட்டு தப்பினார். சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசில் சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளித்தார். விசாரணையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் ராமநாதபுரத்தை சேர்ந்த 24 வயது லோகேஷ்வரன் என தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் மது போதையில் தான் என்ன செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை என போலீசாரிடம் லோகேஷ்வரன் கூறினார். அவரை கைது செய்த போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ