மாடியில் இருந்து குதித்து தப்பிய மகன் மற்றும் வேலைக்கார பெண்
மாடியில் இருந்து குதித்து தப்பிய மகன் மற்றும் வேலைக்கார பெண் / Chennai / Fire breaks out in luxury bungalow / old couple death சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகரை சேர்ந்தவர் ஆடிட்டர் ஸ்ரீராம். இவரது மனைவி சியாமளா. மகன் ஸ்ரவன், வயது 18. மகள் ஸ்ரேயா, வயது 16. தந்தை நடராஜன், தாயார் தங்கம் ஆகியோருடன் ஸ்ரீராம் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். சொந்த வேலை காரணமாக மனைவி மற்றும் மகளுடன் ஸ்ரீராம் வெளியில் சென்றனர். வீட்டில் ஸ்ரவன் மற்றும் பெற்றோர் இருந்தனர். இன்று மதியம் வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. வீட்டின் உள்ளே வெப்பக்காற்று வீசியதால் ஸ்ரவன் வெளியில் வந்து பார்த்தார். வீட்டில் தீ பற்றி எரிவதை கண்டு அலறி அடித்து மாடியில் இருந்து கீழே குதித்து தப்பினார். அவருடன் வீட்டில் வேலை பார்த்த சரஸ்வதி என்ற பெண்ணும் மாடியில் இருந்து குதித்து உயிர் தப்பினார். அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். வயதான தம்பதியினர் வெளியில் வரமுடியாமல் சிக்கிக்கொண்டனர். 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 2 மணிநேர போராட்டத்திற்கு பி்ன் தீயை கட்டுபடுத்தினர். தீயில் சிக்கி வயதான தம்பதிகள் உடல் கருகி ஸ்பாட்டிலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். தீ விபத்தில் வீடு முழுவதும் தீயில் எரிந்து முற்றிலும் சேதமானது.