சவரன் ₹ 52,000 கீழ் சென்றது |Gold prices fell
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. நேற்று காலை தங்கம் ஒரு சவரன் 54,480 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி 95 ரூபாய் 60 காசுக்கு விற்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பதாக அறிவிக்கப்பட்டது. அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் தங்கம் விலை கிராமுக்கு 275 ரூபாய் குறைந்து 6,550 ரூபாய்க்கு வந்தது. நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 2,200 ரூபாய் சரிந்து 52,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் 10 காசுகள் குறைந்து 92 ரூபாய் 50 காசுக்கு விற்பனையானது. இன்று சென்னையில் 22 கேரட் தங்கம் விலை மேலும் குறைந்தது. சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 51,920 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 6,490 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை மீண்டும் 52 ஆயிரத்துக்கு கீழ் சென்றதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.