சென்னை ஏர்போர்ட்டில் 1.7 கி., தங்கப் பசையுடன் பலே பெண் கைது | Chennai | 1.7 kg gold seized | women
சென்னை ஏர்போர்ட்டில் 1.7 கி., தங்கப் பசையுடன் பலே பெண் கைது | Chennai | 1.7 kg gold seized | women arrested சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியன் விமானம் சென்னை ஏர்போர்ட் வந்தது. பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சென்னையை சேர்ந்த பெண் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அவரை பெண் சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு பார்சலை திறந்து பார்த்தனர். அதில் இருந்த 4 பிளாஸ்டிக் சிறிய டப்பாக்களில் 1 கிலோ 700 கிராம் தங்கப்பசையை மறைத்து கடத்தியது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு ஒரு கோடியே 7 லட்சம் ரூபாய் இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பெண்ணை கைது செய்து தங்க பசையை பறிமுதல் செய்தனர்.