உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு | Heavy Rain | TN | Puducherry

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு | Heavy Rain | TN | Puducherry

மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலை ஆக்ஸ்ட் 4ம் தேதி வரை தொடரலாம். மேலும், வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடலில் தெற்கு பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை