உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / தமிழக பகுதிகளில் இருந்து கீழடுக்கு சுழற்சி நகர்ந்ததால் மழைக்கு வாய்ப்பு | Heavy Rain | TN

தமிழக பகுதிகளில் இருந்து கீழடுக்கு சுழற்சி நகர்ந்ததால் மழைக்கு வாய்ப்பு | Heavy Rain | TN

குமரி கடல் உள்ளிட்ட பகுதிகளின் மீது வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது காரணமாக, கன்னியாகுமரி முதல் சேலம் வரையிலான மாவட்டங்களில் சில நாட்களாக கன மழை பெய்தது. தற்போது கீழடுக்கு சுழற்சி தமிழக பகுதிகளில் இருந்து நகர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பின் ஆகஸ்ட் 27 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை