5தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கல பதக்கம் வென்று அசத்தல்
5தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கல பதக்கம் வென்று அசத்தல் / Chennai / International Karate Championship Tamil Nadu players bag gold medals மலேசியாவில் 21 வது சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற்றது. போட்டியில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ரஷ்யா, சீனா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த சாய் அக்ஷரா, நிவேதா, ஹர்ஷிதா, வினிஷா, ஃபாலிஷா, ஜியா ஹர்ஷினி உள்ளிட்ட 7 வீராங்கனைகள் கலந்து கொண்டனர், 2 பிரிவுகளில் தமிழக வீராங்கனைகள் 5 தங்கப்பதக்கம், 3 வெள்ளி பதக்கம், 4 வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். மலேசியாவில் இருந்து சென்னை வந்த வீரர்கள் வீராங்கனைகளை பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்,