/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ க்யூ ஆர் கோடுக்கு பணம் அனுப்பினால் டிக்கெட் என மோசடி | Chennai | IPL Ticket
க்யூ ஆர் கோடுக்கு பணம் அனுப்பினால் டிக்கெட் என மோசடி | Chennai | IPL Ticket
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் உப்பல் மைதானத்தில் ஏப்ரல் 5 ம் தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றனர். போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன. ஆன்லைன் டிக்கெட்டுகள் முடிந்து விட்டதால் பேடிஎம் விற்பனையை நிறுத்தியது. ஆனால் சமூக ஊடகங்கள் மூலம் போட்டிக்கான டிக்கெட்டுகள் இருப்பதாகவும் தேவை எனில் அவர்கள் அனுப்பும் க்யூ ஆர் கோடுக்கு பணம் அனுப்பும்படி மோசடியில் ஆசாமிகள் ஈடுபட்டு வருகின்றனர். மோசடி ஆசாமிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
மார் 30, 2024