₹15 லட்சத்துக்கு ரயில்வே பணி நியமன ஆணை! போலி ஆபீசர் கைது | Job Fraud Case | Chennai
ராமநாதபுரத்தை சேர்ந்த 27 வயதான வினோத் மைக்கேல், 2 வருடமாக சென்னை பெரம்பூர் சிறுவள்ளூரில் வசித்து வருகிறார். அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்க்கிறார். வியாசர்பாடியை சேர்ந்த விஜயகுமார், வினோத்துக்கு பழக்கமானார். தான் ரயில்வேயில் வேலை பார்ப்பதாக சொன்ன விஜயகுமார், பலருக்கும் தனது துறையில் வேலை வாங்கி கொடுத்ததாக வினோத்தை நம்ப வைத்தார். 15 லட்சம் ரூபாய் தந்தால் வினோத்துக்கும் வேலை கிடைக்கும் என்றார். இதை நம்பி அவர் விஜயகுமாருக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்தார். அவரும் ரயில்வே நிர்வாகம் வழங்குவது போல் பணி நியமன ஆணை கொடுத்தார். மும்பையில் வேலை என்று சொன்னார். இது உண்மை என்று நம்பிய வினோத், பணி நியமன ஆணையுடன் மும்பை சென்றார். ரயில்வே அதிகாரிகளிடம் காட்டி வேலையில் சேர முயன்றார். அவர்கள் இது போலி பணி நியமன ஆணை என்று அவருக்கு புரிய வைத்தனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வினோத் போலீசில் புகார் செய்தார். விசாரணை செய்த போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர்.