இந்திய மகளிர் அணி தங்கம் வெல்ல உறுதுணையாக இருந்தவர் கிருத்திகா
இந்திய மகளிர் அணி தங்கம் வெல்ல உறுதுணையாக இருந்தவர் கிருத்திகா / Chennai / Kabaddi player Krithika receives a warm welcome at the airport பஹ்ரைன் நாட்டில் கடந்த 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஆசிய இளையோருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. 19 வகையான விளையாட்டுகள் நடைபெற்றது. 45 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். 18 வயது உட்பட்டோர்க்கான இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்த ஆண்டு கபடி போட்டியும் நடத்தப்பட்டது. கபடி போட்டியில் ஆடவர்கள் பிரிவில் 14 அணிகளும் மகளிர் பிரிவில் 10 அணிகளும் பங்கேற்றன. ஆடவர் இறுதி போட்டியில் இந்திய அணி 35-32 என ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது, மகளிர் பிரிவில் இந்திய அணி 75-21 என ஈரானை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தனர். சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கிருத்திகா மகளிர் அணி தங்கம் வெல்லவும், ஆடவர் அணியில் மன்னார்குடி வடுவூரை சேர்ந்த அவினேஷ் தங்கம் வெல்ல உறுதுணையாக இருந்தனர். 9 ஆண்டுகள் கழித்து இந்திய மகளிர் கபடி அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரங்கனை தங்கம் வெல்ல உறுதுணையாக இருந்ததால் முதல்வர் ஸ்டாலின் கிருத்திகாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். வீராங்கனை கிருத்திகாவும் கபடி வீரர் அபினேஷும் விமான மூலம் சென்னை திரும்பினர். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.