உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / 63 நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார் குருபூஜை விமர்சை | Kootruva nayanar Guru Puja

63 நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார் குருபூஜை விமர்சை | Kootruva nayanar Guru Puja

63 நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார் குருபூஜை விமர்சை / Kootruva nayanar Guru Puja / Tiruvottiyur பூலோக கைலாயம் என அழைக்கப்படும் சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள ஆதிபுரீஸ்வரர் சன்னதி அருகில் அருள் பாவிக்கும் 63 நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார் குருபூஜை விமர்சியாக நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றப்பட்டது. தொடர்ந்து பஞ்சாமிர்தம், தேன், பால், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பல வண்ண மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்து தூப தீப ஆராதனை நடைபெற்றன. பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது

ஜூலை 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !