சென்னையில் வேலியே பயிரை மேயந்த கொடுமை
சென்னையில் வேலியே பயிரை மேயந்த கொடுமை | Velachery |Traffic Inspector |Manimaran Sexual Harassment சென்னை வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கடைக்குச் சென்றுவிட்டு நடுத்தர வயது பெண் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபர், பெண்ணை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். காமக்கொடூரன் பிடியில் இருந்து தப்பிய அப்பெண், தனக்கு நேர்ந்து துயரம் குறித்து வேளச்சேரி போலீசில் புகார் கூறினார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் பெண்ணை சீண்டியது, ராணிப்பேட்டை டிராஃபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், வயது 45 என தெரியவந்தது. வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வரும் மணிமாறன், சம்பவம் நடந்த அன்று ராணிப்பேட்டையில் இருந்து தனது வீட்டிற்கு வரும்போது மது போதையில் பெண்ணை சீண்டியது உறுதியானது. அவர் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். வேலியே பயிரை மேய்ந்த சம்பவம் காவல்துறையில் அதிர்வலையை ஏற்படுத்தியது.