விழாக்கோலம்பூண்டது M.O.P.வைஷ்ணவாமகளிர் கல்லூரி |M.O.P.Vaishnava college|Yuva samman - 2025|Chennai
விழாக்கோலம் பூண்டது M.O.P. வைஷ்ணவா மகளிர் கல்லூரி / M.O.P. Vaishnava college/ Yuva samman - 2025/ Chennai சென்னை M.O.P. வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் ஏழாவது யுவ-சம்மான் விருதுகள் விழா விமர்சையாக நடைபெற்றது. M.O.P. charity மற்றும் ஸ்ரீ V.V சபா நிர்வாகிகள் சார்பில் 1992ம் ஆண்டு M.O.P. வைஷ்ணவா பெண்கள் கல்லூரி துவக்கப்பட்டது. தற்போது NAAC தர மதிப்பீட்டில் A++ அங்கீகாரத்துடன் கல்லூரி அபார வளர்ச்சி அடைந்திருக்கிறது. பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பெண்களுக்கான வளர்ச்சி சேவையில் M.O.P வைஷ்ணவா கல்லூரி பெரும் பங்களித்து வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் பல்வேறு துறையில் சாதித்த இளம் பெண் வெற்றியாளர்களை கௌரவிக்கும் M.O.P. யுவ-சம்மான் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஏழாவது யுவ-சம்மான் விருது வழங்கும் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. நிகழ்ச்சியை ஆதித்யா ஜெகநாதன் தொகுத்து வழங்கினார். விழாவில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவின் நடுவர் குழுவிற்கு சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது . ஸ்போர்ட்ஸ், தொழில் முனைவோர் மற்றும் கலைத்துறை பிரிவுகளில் M.O.P. யுவ-சம்மான் விருதுகள் வழங்கப்பட்டன. ஸ்போர்ட்ஸ் பிரிவில் ஐந்து பேர் நாமினேட் செய்யப்பட்டனர். பாரா ஒலிம்பிக்ஸ் பாட்மின்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் விருது வென்றார். தொழில் முனைவோருக்கான விருது பிரிவில் மூன்று பேர் நாமினேட் செய்யப்பட்டனர். இன்ஸ்டாகிராம் டிஜிட்டல் கோச் டனிஷா பன்சாலி (Tanisha Bansali) விருது வென்றார். கலைத்துறை பிரிவில் 4 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். கலை இளமணி ஷ்ருதி விருது வென்றார். சிறப்பு அங்கீகாரத்திற்கான விருதை முனைவர் திவ்யா அபிஷேக் வென்றார். வெற்றியாளர்களுக்கு M.O.P. யுவ-சம்மான் விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பெண்களை கௌரவிக்கும் பிரம்மாண்ட விருது விழா தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.