/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ கருணாலயா சிறார்களுடன் ஃபுட்பால் ஃப்ரிஸ்டைலர் லோகன் ரகுராமின் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
கருணாலயா சிறார்களுடன் ஃபுட்பால் ஃப்ரிஸ்டைலர் லோகன் ரகுராமின் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
பிரெஞ்ச் கால்பந்தில் ஃப்ரீஸ்டைலர் வீரராக லோகன் ரகுராம் உள்ளார். இவர் சர்வதேச அளவில் சிறந்த 8 உலக ஃப்ரீஸ்டைல் கால்பந்து வீரராகவும், உலகின் மிக ஸ்டைலான ஃப்ரீஸ்டைலாகவும் உலகை வலம் வருகிறார். இவர் புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டவர். பிரபல கால்பந்து வீரர் மெர்ஸியுடன் பங்கேற்று விளையாடிய பெருமை லோகனுக்கு உண்டு. குழந்தைகள் தினத்தையொட்டி சென்னை வந்த லோகன் சாலையோர சிறார்கள் மற்றும் வடசென்னை தண்டையார்பேட்டை கருணாலயா இல்லத்தின் சிறார்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடி குழந்தைகளை மகிழ்வித்தார்.
நவ 17, 2024