உடலை முறுக்கி கமர் மரோதாசனம் செய்து சாதனை | Ponneri | girl in yoga | Three world records
கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் வேலு - அஸ்வினி தம்பதி மகள் நந்திதா, வயது 8. நான்காம் வகுப்பு படிக்கிறார். இவர் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையத்தில் யோகா பயின்றார். இவர் முன் புறமாக வளைந்து உடலை முறுக்கி இடது கை, வலது காலையும், வலது கை, இடது காலையும் தொடக்கூடிய கமர் மரோதாசனம் எனும் ஆசனத்தை ஒரு நிமிடத்தில் 45 முறை செய்து உலக சாதனை படைத்தார். இவரது சாதனை இன்டர்நேஷனல் யோகா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் வேல்ர்ட் வயட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன. சாதனை படைத்த மாணவி நந்திதா, பயிற்சியாளர் சந்தியா ஆகியோரை பள்ளி நிர்வாகம், சக மாணவர்கள் மற்றும் பகுதி மக்கள் பாராட்டினர்.