உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / வெற்றி பெறும் அணி சர்வதேச போட்டிக்கு நேரடி தகுதி Hosur | Throw ball competition

வெற்றி பெறும் அணி சர்வதேச போட்டிக்கு நேரடி தகுதி Hosur | Throw ball competition

ஒசூர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இந்தியா எறிபந்து கூட்டமைப்பின் சார்பில் இந்தியா இலங்கை நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் சர்வசேத எறி பந்து போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டிகளை ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா, இந்தியா எறிபந்து கழகத்தின் தலைவர் மணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இருநாட்டு அணி வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியில் ஆண்கள், பெண்கள் அணிகள் என தனி தனியாக விளையாடுகின்றனர். இந்திய அணிகளை சேர்ந்த 32 வீரர்களும், இலங்கை அணிகளை சேர்ந்த 32 வீரர்களும் என 64 பேர் கலந்து பங்கேற்றுள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் சர்வதேச நாடுகள் பங்கேற்கும் போட்டிக்கு நேரடி தகுதி பெறும். இதில் வெற்றி பெறும் அணிகள், வீரர்களுக்கு கேடயம், பரிசுகளும் வழங்க பட உள்ளது.

டிச 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ