உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / இனி சுடுகாட்டுக்கு எப்படி போவோம்? செம்பரம்பாக்கம் மக்கள் போராட்டம் | People Protest | chembarambakka

இனி சுடுகாட்டுக்கு எப்படி போவோம்? செம்பரம்பாக்கம் மக்கள் போராட்டம் | People Protest | chembarambakka

பூந்தமல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஊராட்சியில் ஆதிதிராவிடர்களுக்கு தனி சுடுகாடு உள்ளது. சுடுகாடு செல்லும் பாதையை 150 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். திடீரென இந்த வழியாக சடலங்களை எடுத்துச் செல்லக்கூடாது என சிலர் தடை போட்டனர். பாதையை மறைத்து சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் துவங்கியது. அதிர்ச்சியடைந்த மக்கள் அந்த பாதையை மீட்டு தரக்கோரி சுடுகாடு அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். நசரத்பேட்டை போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுடுகாட்டு பாதையை மீட்டு தர வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

ஜன 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி