உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / மோதல் உருவாகும் சூழ்நிலையில் அதிமுக திமுகவினரை சமாதானம் செய்த அதிகாரிகள்

மோதல் உருவாகும் சூழ்நிலையில் அதிமுக திமுகவினரை சமாதானம் செய்த அதிகாரிகள்

மோதல் உருவாகும் சூழ்நிலையில் அதிமுக திமுகவினரை சமாதானம் செய்த அதிகாரிகள் | Chennai | PLA 2 consultation meeting | Ex MLA assistant argument சென்னை வேளச்சேரி சேவா நகரில் உள்ள சமூக நலக்கூடத்தில் பூத் முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு வாக்காளர் திருத்தம் சம்பந்தமான பிஎல்ஓ மற்றும் பிஎல்ஏ கலந்தாய்வு கூட்டத்தில் திமுக முகவர்கள் குளறுபடி செய்கிறார்கள் என அதிமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். அதிமுக IT wing மாவட்டச் செயலாளர் சாய் குமார் துணை கமிஷனரிடம் பிஎல்ஓக்கள் வருவதற்கு முன் தகவல் தெரிவிப்பது இல்லை. மொபைலில் அழைத்தால் போனை எடுப்பதில்லை என புகார் கூறினர். அதற்கு வேளச்சேரி மேற்கு பகுதிச் செயலாளர் ஆனந்தம் மற்றும் மேற்கு தொகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் சண்முகநாதன் பதில் அளிக்க முற்பட்டனர். இருதரப்பிலும் மோதல் எழும் சூழல் ஏற்பட்டது. இதற்கு அரசு அதிகாரிகள் யாரும் குளப்பத்தை ஏற்படுத்த முடியாது என விளக்கம் கொடுத்தனர். அரசு அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பினர். இதனால் அங்கு சிறிது நேர் பரபரப்பு ஏற்பட்டது.

நவ 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை