உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / தேர்தலை முன்னிட்டு ஒப்படைக்க வேண்டிய 599 துப்பாக்கிகள் ஒப்படைக்கவில்லை

தேர்தலை முன்னிட்டு ஒப்படைக்க வேண்டிய 599 துப்பாக்கிகள் ஒப்படைக்கவில்லை

தேர்தலை முன்னிட்டு ஒப்படைக்க வேண்டிய 599 துப்பாக்கிகள் ஒப்படைக்கவில்லை | Chennai | Police raid in Chennai; 9 guns seized தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க சென்னை போலீசார் உத்தரவிட்டுள்ளனர். நகரில் மொத்தம் 2,375 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளது. இதுவரை 1,191 துப்பாக்கிகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. வங்கி பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக 527 உரிமம் பெற்ற துப்பாக்கிகளுக்கு மட்டும் விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இன்னும் ஒப்படைக்க வேண்டிய 599 துப்பாக்கிகள் ஒப்படைக்கவில்லை, அதில், 9 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மார் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !