அண்ணாமலை பல்கலை உறுப்பு கல்லுாரிகளில் தேர்வு ரத்து | Rain Alert | TN, Puducherry
கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இரு தினங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு மற்றொரு நாள் நடத்தப்படும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனஅண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.