காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் மழைக்கு வாய்ப்பு | Rain Alert | TN
வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து சென்னை அருகே கரையை கடந்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் வட மாவட்டங்கள், லட்சத்தீவு அதை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் சில பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மத்திய வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 22ல் உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியது.