தென் மாவட்டங்களை ஒட்டிய வங்கக்கடலில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது | Rain Alert | TN
தென்கிழக்கு வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்மாவட்டங்களை ஒட்டி வங்கக்கடலில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில் நாளை மறுதினம் வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பின் வரும் 8ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வரும் 8, 9ம் தேதிகளில் கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.