உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / மழையால் 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை | Rain Alert | TN

மழையால் 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை | Rain Alert | TN

தென்மாவட்டங்களை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 23ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. இதன் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி