ஜூலை 16 ல் மழை வெளுக்கும் | Rain in 7 districts
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகள், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 16 ம் தேதி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் மற்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலுார் மாவட்டம் கீழச்செருவை பகுதியில் 23 செ.மீ., மழை பதிவானது. கடலுார் மாவட்டம் லக்கூரில் 14 செ.மீ, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் 13, திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 11, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 10, மாமல்லபுரத்தில் 9 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.