சென்னையில் இடி, மின்னலுக்கு வாய்ப்பு | Rain Warning | TN
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 13ம் தேதி வரை மழை பெய்யும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக, சென்னை மணலியில் 4 செ.மீ., மழை பெய்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செப் 08, 2024