/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ சென்னை Airport Police-Buddy Patrol துவங்கியது ஏன்? போலீஸ் கமிஷனர் பேட்டி | sandeep rai rathore ips
சென்னை Airport Police-Buddy Patrol துவங்கியது ஏன்? போலீஸ் கமிஷனர் பேட்டி | sandeep rai rathore ips
சென்னை விமான நிலையத்தில் பயணிகள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய Airport Police-Buddy Patrol என்று புதிதாக சிறப்பு பாதுகாப்பு ரோந்து படை துவங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு படையில் சென்னை ஏர்போர்ட் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், விமான பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர். ஏர்போர்ட் வளாகத்தில் 24 மணி நேரமும் இந்த சிறப்பு படையினர் ரோந்து சுற்றி வருவார்கள். பயணிகள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களின் குறை, கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும். இந்த சிறப்பு படையை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
மார் 14, 2024