உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / மடிப்பிச்சை கேட்டா எனது கோரிக்கை நிறைவேறும்: சீரியல் நடிகை சிவ கவிதா |Serial actress Siva Kavita

மடிப்பிச்சை கேட்டா எனது கோரிக்கை நிறைவேறும்: சீரியல் நடிகை சிவ கவிதா |Serial actress Siva Kavita

திருவெற்றியூர் தியாகராஜ ஸ்வாமி வடிவுடையம்மன் கோயிலில் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வரும் சிவ கவிதா சுவாமி தரிசனம் செய்தார்.அவருடன் அவரது கணவர் மற்றும் சீரியல் நடிகர் நவீன்தர் வந்திருந்தார். கோயில் கொடி மரத்தை சுற்றி தியாகராஜ சுவாமி சன்னதி ஆவிபுரீஸ்வரர் சன்னதி ஒற்றீஸ்வரர் சன்னதி பைரவர் மற்றும் 27 நட்சத்திர சன்னதிகளுக்கு சென்று விளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர். வடிவுடையம்மன் சன்னதிக்கு சென்று அம்மன் முன் அமர்ந்து மனமுருகி பிரார்த்தனை செய்தனர். சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் 10ம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தலில் சிவ கவிதா மற்றும் நவீன் போட்டியிடுகிறார்கள். அம்மனிடம் வைத்த பிரார்த்தனை வெற்றி அடைந்தவுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களை செய்யப் போவதாக சிவ கவிதா தெரிவித்தார் சாமி தரிசனம் செய்ய வந்த சின்னத்திரை நடிகை மற்றும் நவீன்தருடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

ஆக 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ