உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / ஆர்.சி., கார் ரேஸ் வெற்றி பெறுவோருக்கு ₹1லட்சம் பரிசு| Chennai | Dinamalar Smart Shoppers in Tambara

ஆர்.சி., கார் ரேஸ் வெற்றி பெறுவோருக்கு ₹1லட்சம் பரிசு| Chennai | Dinamalar Smart Shoppers in Tambara

ஆர்.சி., கார் ரேஸ் வெற்றி பெறுவோருக்கு ₹1லட்சம் பரிசு | Chennai | Dinamalar Smart Shoppers in Tambaram | ₹1 Lakh Prize for Winners சென்னை தாம்பரம் ரயில்வே மைதானத்தில், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன், தினமலர் நாளிதழ், சத்யா ஏஜென்சிஸ் இணைந்து வழங்கும், தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2026 வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி இன்று முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை, காலை 10:30 மணி முதல், இரவு 8:30 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியை, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர், சத்யா ஏஜென்சிஸ் நிர்வாக இயக்குநர் ஜாக்சன் சாமுவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். குளிரூட்டப்பட்ட 250க்கும் மேற்பட்ட அரங்குகளில் தமிழக நிறுவனங்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளை, ஒரே இடத்தில் பார்வையிட்டு, தேவையானவற்றை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இளம்பெண்களுக்கான ரெடிமேட் ஆடைகள், அழகு சாதனம், பேன்ஸி பேக்ஸ், கலைநயமிக்க டிசைனர் ஜுவல்லரி, காலணிகள், குழந்தைகளை மகிழ்விக்க கேம் ஸோனில் பேட்டரி கார், வாட்டர் போட், பலுான் சூட்டிங் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன், லெதர் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ரியல் எஸ்டேட், பர்னிச்சர் மற்றும் இன்டீரியர், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இடம் பெறுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரையும் கவரும் வகையில் ஒட்டகச் சவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஆர்.சி., கார் ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு, 1 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்பட உள்ளது. கம கமக்கும் உணவுகளுடன் புட் கோர்ட்டில், மட்டன், சிக்கன் பிரியாணி, கோலா, பீட்சா, பர்கர், நண்டு லாலிபால், பிங்கர் பிஷ், பிஷ் பிரை என வகை வகையான உணவுகளை ருசிக்கலாம். டூ வீலர், கார் பார்க்கிங் வசதி, மருத்துவ உதவி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நான்கு நாட்கள் நடக்கும் மெகா ஷாப்பிங் திருவிழாவுக்கு, குடும்பத்தோட வாங்க குதுகலத்துடன் கொண்டாடுங்க.

செப் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை